தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எப்படி ஊழல் செய்யலாம் என்பதே தி.மு.க., சிந்தனை பா.ஜ., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

 எப்படி ஊழல் செய்யலாம் என்பதே தி.மு.க., சிந்தனை பா.ஜ., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

 எப்படி ஊழல் செய்யலாம் என்பதே தி.மு.க., சிந்தனை பா.ஜ., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு


ADDED : நவ 29, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ''தமிழகத்தில் 'ஜல் ஜீவன்' திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள், ஒப்பந்த தாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமான, இல்லம் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டம், அனைவருக்கும் சுகாதாரமான, தரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்கிறது. இத்திட்டத்தில், பல மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்திலும் இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், முறையாக இத்திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு, மத்திய அரசு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்திய அரசு திட்டங்களை முறையாக செயல் படுத்தாமல், எதில் எப்படி ஊழல் செய்யலாம் என்பதே தி.மு.க., சிந்தனை. இப்படி யோசிப் பதை தி.மு.க., அரசு நிறுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் முனைப்புடன் கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us