ADDED : ஜூலை 26, 2025 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்களுக்கு நடந்தது, கிட்னி திருட்டு இல்லை முறைகேடு' என்று சொல்கிறார், தமிழக சுகாதாரத்துறை அமை ச்சர் சுப்பிரமணியன். ஒருவரின் ஏழ்மையை பயன்ப டுத்தி, அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை, முறைகேடு என்று சொல்வதா? இப்படி சொல்வதற்கு, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
சரி, நீங்கள் சொல்லும், இந்த முறைகேட்டில் செயல்பட்ட தி.மு.க., நிர்வாகி திராவிட ஆனந்தன், இன்று வரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்? கிட்னி திருட்டில் தொடர்புடைய தி.மு.க.,வின் திருச்சி மணச்சநல்லுார் எம்.எல்.ஏ., நடத்தும் மருத்துவமனை மீது, ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போ துமா? இது தான், நீங்கள் ஆட்சி நடத்தும் லட்சணமா ?
-- அண்ணாமலை,
முன்னாள் தலைவர்,
தமிழக பா.ஜ.,