ஸ்டாலின் தமிழ் பெயரா என கேட்க தைரியம் இருக்கிறதா? திருமாவளவனுக்கு தினகரன் கேள்வி
ஸ்டாலின் தமிழ் பெயரா என கேட்க தைரியம் இருக்கிறதா? திருமாவளவனுக்கு தினகரன் கேள்வி
ADDED : ஜன 31, 2026 09:01 PM

சென்னை: 'ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா என்று கேட்க திருமாவளவனுக்கு தைரியம்இருக்கிறதா' என, அ.ம. மு.க., பொதுச்செயலர் தின கரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: 'தமிழும், தமிழ் கலாசாரமும் அழிவதற்கு வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டுக் கலாசாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றிய தமிழ் மன்னர்கள் குறித்து, திருமாவளவனின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
ராஜராஜன் தமிழ் பெயரா, ராஜேந்திரன் தமிழ் பெயரா என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திருமாவளவனுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள், தமிழ் பெயர்களா என கேட்கும்தைரியமும் துணிச்சலும் இருக்கிறதா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

