இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?
இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?
UPDATED : அக் 16, 2024 06:36 AM
ADDED : அக் 16, 2024 04:54 AM

சென்னை : கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்று (அக்.,16) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
* சென்னை
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்
* திருவள்ளூர்
* ராணிப்பேட்டை
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
* சேலம்
* விழுப்புரம்
* கடலுார்
* கள்ளக்குறிச்சி
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
* திருவண்ணாமலை
கனமழை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட், பாஸ்போர்ட் ஆபிசுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையால், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 ரயில்கள் இன்று ரத்து:
கன மழையால், சென்னை சென்ட்ரல் - போடி நாயக்கனுார் உட்பட, ஏழு விரைவு ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.
* சென்ட்ரல் - போடிநாயக்கனுார்
* சென்ட்ரல் - ஜோலார்பேட்டை
* ஜோலார்பேட்டை - சென்ட்ரல்
* திருப்பதி - சென்ட்ரல்
* சென்ட்ரல் - திருப்பதி
* ஈரோடு - சென்ட்ரல்
* திருப்பதி - சென்ட்ரல் சப்தகிரி ஆகிய ரயில்களின் இன்றைய சேவை ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.