பூட்டிய வீட்டிற்குள் தந்தை, மகளின் அழுகிய சடலங்கள்; வசமாக சிக்கிய டாக்டர்
பூட்டிய வீட்டிற்குள் தந்தை, மகளின் அழுகிய சடலங்கள்; வசமாக சிக்கிய டாக்டர்
ADDED : ஜன 30, 2025 01:05 PM

சென்னை: திருமுல்லைவாயலில் பூட்டிய வீட்டிற்குள் தந்தை, மகள் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயலைச் சேர்ந்த சிந்தியா,35, என்பவர் அவரது தந்தை சாமுவேல் சங்கர்,70, வசித்து வந்தார். சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த சாமுவேலுக்கு, வீட்டிலேயே வைத்து டயாலிஸில் சிகிச்சையை டாக்டர் எபினேசர் என்பவர் கொடுத்து வந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், டயாலிசிஸ் சிகிச்சையின் போது சாமுவேல் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மகள் சிந்தியா, டாக்டர் எபினேசரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை பிடித்து தள்ளியதில், கீழே விழுந்த சிந்தியா எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
இதனால், பயந்து போன டாக்டர் எபினேசர், வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். தற்போது, எபினேசரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.