ADDED : செப் 25, 2024 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஞ்சள் பேட்டி: 'அமைச்சர் தா.மோ.அன்பரசன், பிரதமரை மோடியை பீஸ் பீஸாக்குவேன்' என கூறியுள்ளார். காட்டுமிராண்டிகள் கூட இப்படியெல்லாம் பேச மாட்டர். இப்படி பேசிய பின்பும், அவரை தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் வைத்திருக்கிறார் என்றால், அன்பரசன் கருத்தில் ஸ்டாலினும் உடன்படுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?
நாகரிகமான முதல்வர் என்றால், அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். தமிழகத்தில் அடிப்படை ஞானம் இல்லாதவர்கள் தான், தங்களை பகுத்தறிவு வாதி என சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் பெண்கள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
ஹெச்.ராஜா,
ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர்,
தமிழக பா.ஜ.,

