sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா ? கேட்கிறார் இ.பி.எஸ்.,

/

இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா ? கேட்கிறார் இ.பி.எஸ்.,

இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா ? கேட்கிறார் இ.பி.எஸ்.,

இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா ? கேட்கிறார் இ.பி.எஸ்.,


UPDATED : ஜூலை 05, 2025 07:48 PM

ADDED : ஜூலை 05, 2025 06:20 PM

Google News

UPDATED : ஜூலை 05, 2025 07:48 PM ADDED : ஜூலை 05, 2025 06:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டுள்ளது. எனவே, தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா ?' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் வரும் ஜூலை 7ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த நிலையில், அ.தி.மு.க., தொண்டர்களுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது;

* உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க உங்களைத் தேடி வருகிறேன். உங்கள் இல்லத்தையும், உள்ளத்தையும் தொட்டுப் பேச வருகிறேன்.

* இந்தப் புரட்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் எழுச்சிமிக்கவர்களாக மாற்றுவது மட்டுமே எனது நோக்கம். வெற்றிகரமான ஒரு தமிழகத்தை மீண்டும் உருவாக்குவதே எனது இந்தச் சுற்றுப்பயணத்தின் லட்சியம்.

* இது எனது தனிப்பட்ட பயணம் அல்ல.. ஒட்டுமொத்த தமிழ் நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம்!

* இது எனது தனிப்பட்ட சுற்றுப் பயணம் அல்ல.. ஆட்சி மாற்றத்தையும் சமூக முன்னேற்றத்தையும் விரும்பும் ஒவ்வொரு தமிழரின் சுற்றுப்பயணம்!

* இந்தப் பயணம் விடியா ஸ்டாலின் அரசை வீழ்த்தும் பயணம்

* இந்தப் பயணப் போர்க்களத்தில், ஆளும் கட்சியின் கொடுமைகளையும், சிறுமைகளையும் எதிர்த்துப் போராடும் ஒரு சிப்பாயாக இருப்பேன் !

தமிழக மக்களைத் தேடி வரும் இந்த எழுச்சிப் பயணம், உங்கள் பங்களிப்போடு ஒரு மாற்றத்தை நோக்கிய வெற்றிப் பயணமாக மாறும் என்பதில் எள் முனையளவும் எனக்கு சந்தேகமில்லை.

இதற்கெல்லாம் முன்பாக, சில விஷயங்களையும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

தனிமனித வளர்ச்சியிலும், கூட்டு வளர்ச்சியிலும் வீறுநடைபோட்ட தமிழகம் இப்போது, சில விஷமிகளின் சுயநலத்தால் தள்ளாடுகிறது. மாலுமியை இழந்த கப்பல் போல இலக்கு தெரியாமல் தத்தளிக்கிறது. ஆட்சி நடத்துகிறவருக்கு தமிழக மக்களின் நலன் பற்றிய கவலை இல்லை.

தன் பெண்டு - தன் பிள்ளை - தன் வளம் போன்றவை மட்டுமே லட்சியமாக ருக்கின்றன. அரசாங்கத்தின் அத்தனை பாகங்களிலும் மக்கள் மீதான அலட்சியம் டியேறிவிட்டது. மக்கள் நலனுக்கு எதிரான ஊழல் கோரத் தாண்டவமாடுகிறது.

எளியவர்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் போக்கு ஆட்சியாளர் மனதில் நிறைந்துவிட்டது.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்டவர்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் இப்போது மகிழ்ச்சியாக இல்லையே... ஏன் ?

ஒருசில கல்விக் கூடங்களும், சில சமூக ஊடகங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கூடாரமாக தொடர்ந்து செயல்படுவது ஏன் ?

அமைதிப்பூங்காவான தமிழகம் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டாலும், போதைப் பொருள் பெருக்கத்தாலும் அல்லலுறுவது ஏன் ?

அதிகாரத்தைக் காட்டி தனிமனிதச் சொத்துக்களை அபகரிப்பதை இந்த அரசு மூடி மறைப்பது எதனால் ?

அரசின் அச்சாணியாக இயங்கும் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கப்படவேண்டிய செயல் அல்லவா ?

தமிழகத்தில் “கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன்” இல்லாத துறைகளே இல்லை. இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா ?

படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் ? இப்படி, இந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்று அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டுள்ளது. எனவே, தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா ?

சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை எவரும் தமிழ்கத்தில் பாதுகாப்போடு நடமாட முடியவில்லை. சிறுவர்களைச் சிதைக்கிற பெருங்குற்றங்கள் அதிகரித்துவிட்டன. முதியோர்கள் உயிரைத் தொடர்ச்சியாகப் பறிக்கிற ஈவு இரக்கமற்ற செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நாம் தமிழகத்தில் தான் இருக்கிறோமா அல்லது ஈவு இரக்கமற்ற நீரோ மன்னனின் கொடுங்கோலாட்சியில் இருக்கிறோமா என ஒவ்வொரு தமிழரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் மனத்தில் நீறுபூத்த நெருப்பாக வேதனை சூழ்ந்து கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளும் தி.மு.க., அரசாங்கம் தமிழக மாணவர்களின் கல்வியில்கூட அரசியல் செய்கிறது. போலி வாக்குறுதிகளைக் கொடுத்து பொய்யான ஆட்சி நடத்தும் மூடர்களின் கொட்டத்தை அடக்கி வீட்டுக்கு அனுப்ப, உங்களை எல்லாம் என்னோடு இணை






      Dinamalar
      Follow us