ADDED : டிச 13, 2024 01:25 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:''தமிழகத்திற்கு மழை தேவை இருக்கிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை மழை தேவை இருக்கிறது. அதற்காக மழைவேண்டுமென நினைக்கிறோம். மழை அதிகமாக பெய்தால் அதை சமாளிக்க கூடிய தைரியம் இந்த அரசுக்கு உள்ளது. அரசும், முதல்வரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். மழைக்காக யாரும் அச்சப்பட தேவையில்லை.
மழை அதிகமாக பெய்யும் பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை மீட்டு தங்க வைக்க மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
கலெக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். ஒவ்வொரு அரசுத்துறை அதிகாரிகளும், தங்கள் துறை சார்பில் பணிகளை செய்கின்றனர்.
எங்கு பாதிப்புகள் ஏற்படுமோ, அதை உடனடியாக சரி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நிலைமையை முதல்வரும், நாங்களும், அதிகாரிகளும் கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

