ஓட்டு சேகரிக்க வர வேண்டாம் நரிக்குறவர் காலனியில் போஸ்டர்
ஓட்டு சேகரிக்க வர வேண்டாம் நரிக்குறவர் காலனியில் போஸ்டர்
ADDED : மார் 18, 2024 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில், 1977ம் ஆண்டு, தமிழக அரசு சார்பில், 235 வீடுகள் கட்டப்பட்டன.
அந்த வீடுகள் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.
ஆத்திரமடைந்த நரிக்குறவர் காலனி பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக, அப்பகுதி முழுதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், யாரும் ஓட்டு சேகரிக்க வர வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

