ADDED : நவ 28, 2024 01:18 AM
சென்னை,:'அவசர மகப்பேறு வசதியில்லா ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிரசவங்கள் பார்க்க கட்டாயப்படுத்த வேண்டாம்' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹுவிடம், அரசு டாக்டர்கள் கோரிக்கை அளித்தனர்.
இதுகுறித்து, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் அளித்துள்ள மனு:
மகப்பேறு மரண விகிதத்தை, லட்சத்திற்கு 10 ஆக குறைக்க, அவசர மகப்பேறு வசதியில்லா ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது.
கிராம சுகாதார செவிலியர்கள், தாய், சேய் நலத்தில் முழு கவனம் செலுத்தும் வகையில், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தை, பழையபடி சமூக நலத் துறைக்கு மாற்ற வேண்டும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தி, மருத்துவ அலுவலர்களை கண்காணிக்கக் கூடாது. மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு, 385 மருத்துவ அலுவலர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.