ADDED : டிச 13, 2024 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ளார். அவர் அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு மலைப்பகுதி மாஞ்சோலை எஸ்டேட் சென்றார்.
அங்கு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொழிலாளர்கள் நான்கு பேருக்கு தெற்கு பாப்பான்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கி விளக்கேற்றினார்.
அங்குள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களை சந்தித்துப் பேசினார்.
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் துறை அதிகாரிகளுடன் கூட்டத்தில் பங்கேற்றார்.
நேருவிடம், 'மாஞ்சோலையில் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றிய பிறகு, அங்கு பெரிய அளவில் தனியார் சுற்றுலா திட்டம் வர உள்ளதாகக் கூறப்படுகிறதே?' என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, ''என் வாயை கிளறாதீர்கள்,'' எனக்கூறி புறப்பட்டார்.

