sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரமான சுவரில் கை வைக்காதீங்க: மின்வாரியம் எச்சரிக்கை

/

ஈரமான சுவரில் கை வைக்காதீங்க: மின்வாரியம் எச்சரிக்கை

ஈரமான சுவரில் கை வைக்காதீங்க: மின்வாரியம் எச்சரிக்கை

ஈரமான சுவரில் கை வைக்காதீங்க: மின்வாரியம் எச்சரிக்கை


ADDED : அக் 20, 2025 07:26 AM

Google News

ADDED : அக் 20, 2025 07:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், பொதுமக்களுக்கு மின் வாரியம் வெளியிட்டுள்ளபாதுகாப்பு அறிவுரைகள்:

 மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்

 சாலைகளிலும், தெருக்களிலும், மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ, வாகனத்தில் செல்வதோ கூடாது

 தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும், மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்

 ஈரமான கைகளால், மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்

 வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள, ஈரப்பதமான சுவர்களில் கைவைப்பதை தவிர்க்க வேண்டும்

 மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள, 'ஸ்டே ஒயர்' மீதோ, கொடி கயிறு கட்டி, துணி காய வைக்க வேண்டாம். மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ, கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us