ADDED : பிப் 02, 2024 11:04 PM
மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், 1970களில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, சில நாட்களில் முடிவுக்கு வந்தது. தற்போது, பல்வேறு நாடுகளில் அந்நோய் கண்டறியப்பட்டு வருகிறது.
குரங்கு அம்மை பாதிப்பு, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவினால், ஏழு முதல் 14 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, உடலில் தடிப்புகள்உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நோயாளிகளின் உமிழ் நீர், சளி வாயிலாக இந்நோய் பிறருக்கு பரவும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டியுள்ளது.
கர்நாடகாவின் மலைப்பகுதிகளில், 21 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழகத்தில்அதற்கான அறிகுறி இதுவரை இல்லை. எனவே அச்சம் வேண்டாம். அண்டை மாநிலத்தில் பாதிப்பு இருப்பதால், தமிழகத்தில்மருத்துவ கண்காணிப்பை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
- செல்வவிநாயகம்
பொது சுகாதாரத்துறை இயக்குனர்

