ADDED : பிப் 20, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழைப்பொழிவு மற்றும் வானிலை அளவீட்டு விபரங்களை, நிகழ்நேர அடிப்படையில் பெற, 1,400 இடங்களில் புதிய தானியங்கி மழைமானிகள், 100 இடங்களில் புதிய தானியங்கி வானிலை நிலையங்களை, 32 கோடியில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அதிதிறன் மிக்க மிக விரைவான கணினி சேவைகளை பெற, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், 'ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர்' உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெள்ளம், புயல், நில அதிர்வு போன்ற பேரிடர்களை கண்காணித்து, அபாயங்களை குறைக்க, புதிதாக தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்
வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்தும் வகையில், ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய நகரங்களில், 'டாப்ளர் ரேடார்' 56 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

