ADDED : ஏப் 25, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:நண்பரை வெட்டிக்கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்காசி அருகே ஆய்க்குடி கம்பிளியை சேர்ந்த வேல்சாமி மகன் மகாதேவன் (எ) தேவா 21.
பக்கத்து வீட்டில் வசிக்கும் அழகையா மகன் மகாதேவன் (எ) வரிப்புலி 25.
இருவரும் நண்பர்கள் . சிறு சிறு பிரச்சனைகளில் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. 2021 ஜூன் 19 மாலையில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த தேவாவை அவரது வீட்டுக்குள் புகுந்து வரிப்புலி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். வழக்கு விசாரணை தென்காசி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் வரிப்புலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி மனோஜ் குமார் தீர்ப்பளித்தார்.