சென்னையில் இரட்டைக்கொலை; ஓட ஓட விரட்டி சகோதரர்களை வேட்டையாடிய பயங்கரம்
சென்னையில் இரட்டைக்கொலை; ஓட ஓட விரட்டி சகோதரர்களை வேட்டையாடிய பயங்கரம்
ADDED : ஜன 18, 2025 09:22 PM

சென்னை: ஆவடி அருகே சகோதரர்கள் இருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்சம்பவங்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஸ்டாலின், ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை 3 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்னை காசிமேடு திடீர் நகரில் ரவுடி லோகநாதன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.