கணவர் இறப்பில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து மனைவி போராட்டம்
கணவர் இறப்பில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து மனைவி போராட்டம்
ADDED : மார் 18, 2024 01:41 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சுமைதாங்கியில் வயலில் இறந்து கிடந்த கணவர் பாலமுருகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து மனைவி வனஜா உறவினர்களுடன் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
உத்தரகோசமங்கை அருகேவுள்ள சுமைதாங்கியைச் சேர்ந்த சண்முகவேலு மகன் பாலமுருகன் என்ற பாலாஜி 30. இவர் மைக்செட் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி வனஜா. இவர்களுக்கு குழந்தையில்லை.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு சென்ற பாலமுருகன் திரும்பவில்லை.
இந்நிலையில் வயல்வெளியில் அவர் இறந்து கிடந்தார்.
வனஜா கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது எனக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாலமுருகன் இறந்தது தொடர்பாக உத்தரகோசமங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். -

