தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/டாக்டர் சுப்பையா கொலை வழக்கு மேல்முறையீடு விசாரணை துவக்கம்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு மேல்முறையீடு விசாரணை துவக்கம்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு மேல்முறையீடு விசாரணை துவக்கம்


ADDED : பிப் 20, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், துாக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்களின் இறுதி விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் துவங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பையா; சென்னையில், நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது, அவரை கூலிப்படையினர் வெட்டிக் கொன்றனர். நிலப் பிரச்னை தொடர்பாக, 2013ல் இச்சம்பவம் நடந்தது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மகன்கள் பாசில், போரிஸ், மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு துாக்கு தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

துாக்கு தண்டனையை உறுதி செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பும், துாக்கு தண்டனையை எதிர்த்து ஏழு பேரும், ஆயுள் தண்டனையை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்தனர்.

இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் பிரபாகரன் வாதாடினார்.

பின், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில், மும்பை வழக்கறிஞர் சவுத்ரி வாதாடினார். வாதம், இன்றும் தொடர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us