sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ வரையாடுகள் கணக்கெடுப்பு வரும் 24ம் தேதி துவக்கம்

வரையாடுகள் கணக்கெடுப்பு வரும் 24ம் தேதி துவக்கம்

வரையாடுகள் கணக்கெடுப்பு வரும் 24ம் தேதி துவக்கம்


ADDED : ஏப் 11, 2025 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழக, கேரள வனப்பகுதிகளில், நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு, வரும், 24ம் தேதி துவங்க உள்ளது.

தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம், 2022ல் துவங்கப்பட்டது. இதன்படி, நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை அறிவது, அதன் வாழிடங்களை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதல்முறையாக, கடந்த ஆண்டு ஏப்ரல், 29ல் வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக, கேரள வனப்பகுதிகளில், இரண்டு மாநில வனத்துறையினரும் இணைந்து இப்பணியை செய்தனர்.

கணக்கெடுப்பில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வரும் முக்கூர்த்தி தேசிய பூங்கா, கோவை மாவட்டம் வால்பாறை உள்ளிட்ட இடங்களில், 1,031 வரையாடுகள் இருப்பது தெரியவந்தது.

இந்த ஆண்டும் தமிழக, கேரள வனத்துறையினர் இணைந்து, வரும், 24 முதல், 27ம் தேதி வரை வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், 176 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us