ADDED : அக் 31, 2025 12:52 AM

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ., வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மோசடி செய்கிறது. தமிழகம் மட்டுமல்ல; எல்லா மாநிலங்களிலும் இந்த முறைகேட்டைச் செய்யவே, வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் 'டிராமா' போடுகின்றனர். அதாவது, வட மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக தமிழகம் வந்துள்ள, லட்சக்கணக்கானோர் பெயரை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சி எடுத்துள்ளனர்.
வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒரு கோடி பேரை, தேர்தல் கமிஷன் ஆதரவோடு, தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்து, அரசியல் லாபம் பெற முயல்கின்றனர்.
அதை தெரிந்த பின்பும், எதிர்க்காமல் எப்படி இருக்க முடியும்? இது குறித்து அனைத்துக்கட்சித் தலைவர்களையும் கூட்டி வைத்து பேசி முடிவெடுக்கலாம் என்பதற்காக, முதல்வர் ஸ்டாலின், அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி உள்ளார். அதில், இந்த முயற்சிக்கு எதிராக இறுதி முடிவெடுக்கப்படும்.
-- செல்வப்பெருந்தகை
தலைவர், தமிழக காங்.,

