sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அண்ணாதுரை, கருணாநிதி கொள்கைகளை புறந்தள்ளிவிட்டது திராவிட மாடல் ஆட்சி ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சனம்

/

அண்ணாதுரை, கருணாநிதி கொள்கைகளை புறந்தள்ளிவிட்டது திராவிட மாடல் ஆட்சி ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சனம்

அண்ணாதுரை, கருணாநிதி கொள்கைகளை புறந்தள்ளிவிட்டது திராவிட மாடல் ஆட்சி ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சனம்

அண்ணாதுரை, கருணாநிதி கொள்கைகளை புறந்தள்ளிவிட்டது திராவிட மாடல் ஆட்சி ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சனம்

2


ADDED : ஜன 06, 2025 07:46 AM

Google News

ADDED : ஜன 06, 2025 07:46 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; ''அண்ணாதுரை, கருணாநிதியின் கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு தி.மு.க., ஆட்சி நடத்துகிறது,'' என, ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.

மதுரை பழங்காநத்தத்தில் பிராமணர்களை பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாநிலத்தலைவர் திருமாறன் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் பிராமணர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. நாட்டில் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நடைமுறையில் இல்லை. அதில் பிராமணர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர், முஸ்லிம்கள் உட்பட 68 சமூகங்கள் உள்ளன. பி.சி.ஆர்., போன்ற சட்டம் பிராமண சமூகத்திற்கும் வேண்டும் என்றார்.

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது: தி.மு.க., தி.க.,வின் ஐ.டி., பிரிவுகள் தொடர்ந்து பிராமண சமூகத்தை அவமதிக்கின்றன. பிராமணர்களுக்கு சலுகைகள் கேட்கவில்லை. அவர்களை அவமானம், கேலி கிண்டல் செய்யாதீர்கள். பிராமணர்கள், அர்ச்சகர், சிவாச்சாரியார்களாக கோயில்கள், ஹிந்து கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்கின்றனர். ஆனால் அவர்களை ஒருமையில் பேசுகின்றனர். ஐயப்ப பக்தர்கள் மனம் புண்படும்படி பாடல் பாடுகின்றனர்.சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகின்றனர்.

ஹிந்துக்களை குறிப்பாக பிராமண சமூகத்தை இழித்தும் பழித்தும் பேசுகின்றனர். பொள்ளாச்சி விவகாரத்தில் குரல் கொடுத்தவர்கள் அண்ணா பல்கலை விவகாரத்தில் எங்கு சென்றனர். திட்டமிட்டு ஹிந்துக்களை, பெண் சன்னியாசிகளை கேவலப்படுத்துகின்றனர்.

சனாதன கொள்கையில் தீவிரமாக உள்ளவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். அண்ணா பல்கலை விவகாரத்தில் 'யார் அந்த சாரை' போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நடிகை கஸ்துாரியை வெளி மாநிலம் சென்று கைது செய்கின்றனர். சீமான், பா.ஜ.,வின் குஷ்பு, பா.ம.க.,வின் சவுமியா உள்பட போராடுவோரை கைது செய்கின்றனர். தற்போது கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஞானோதயம் வந்துள்ளது. 'போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது' என உணர்ந்துள்ளனர்.

பிராமணர்கள் அனைத்து சமூகத்தினருடனும் ஒன்றுபட்டு வாழ்பவர்கள். எங்காவது ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என அவர்கள்மீது வழக்கு உண்டா. கோயில்களில் அனைத்து சமூகத்தினரையும் அழைத்துச் சென்ற வைத்தியநாத ஐயர், பெண் கல்விக்கு வித்திட்ட ஈஸ்வர சந்திர வித்யாசாகர், உடன்கட்டை ஏறுவதை ஒழித்த ராஜாராம் மோகன்ராய், தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர் பிராமணர்களே.

கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கியவர்கள், அம்பேத்கரின் ஆசிரியர், அவரது 2வது மனைவி பிராமணர்கள்தான். நாட்டில் எல்லா புரட்சிகளும் பிராமணர்களால் நடந்தது. தீண்டாமை ஒழிய பாடுபட்டவர்கள் பிராமணர்கள். ஈ.வெ.ரா.விடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தி.மு.க.,வை உருவாக்கியவர் அண்ணாதுரை. ஈ.வெ.ரா., தி.க.,வில் பிராமணர்களை சேர்க்கவில்லை. சுதந்திரம் வேண்டாம் என்றார். ஆனால் அண்ணாதுரை தி.மு.க.,வில் பிராமணர்களை சேர்த்தார். சுதந்திர தினத்தை 'இன்ப தினம்' என்றார்.

கருணாநிதி பா.ஜ.,வு டன் கூட்டணி வைத்தவர். ராமானுஜ காவியம் எழுதியவர். இன்று அண்ணாதுரை, கருணாநிதி கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டு, கிரிப்டோ கிறிஸ்தவர்களும், தி.க., உறுப்பினர்களும் தி.மு.க.,வை கைப்பற்றி, ஸ்டாலினை கைப்பாவையாக்கி 'திராவிட மாடல்' போர்வையில் சனாதனத்தை ஒழிக்க முயற்சிக்கின்றனர். பிராமணர்கள் தி.மு.க.,வுக்கு விரோதிகள் அல்ல. அவர்களை இந்த அரசு அழைத்து பேச வேண்டும். இவ்வாறு பேசினார்.

பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராமஸ்ரீனிவாசன் பேசியதாவது: ஆயிரம் மின்னல்கள் பாய்ந்த உணர்வு ஹிந்து என்றவுடன் இருக்க வேண்டும். பிராமணர்கள் அனைத்து சமூகத்தையும் தன் சமூகமாக பார்ப்பவர்கள். விடுதலை, சமூக நீதிக்காக பாடுபட்ட பிராமண சமூகம் இன்று ஏளனம், சிறுமைப்படுத்துதல் என உளவியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தாலும் எண்ணங்களில் உயர்ந்தவர்கள். 2026ல் தி.மு.க., ஆட்சி துடைத்து எறியப்படும் என்றார். மாலை 5:00 மணிக்கு பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்தனர்.

ஹிந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட தலைவர் சோலை கண்ணன், இளைஞர் அணி மாநில தலைவர் ஓம்கார் பாலாஜி, வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், அனுஷத்தின் அனுக்கிரஹம் நிறுவனர் நெல்லை பாலு, மதுரை காஞ்சி சங்கர மடம் செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட தலைவர் ரவி, மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீராமன், நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, விஸ்வநாதன், மாவட்ட தாம்ப்ராஸ் தலைவர் ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம், செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் பாஸ்கர்ராவ், நிர்வாகிகள் சீனிவாசன், விஸ்வநாதன், பேராசிரியர் மீனாட்சி பட்டாபிராமன், ராமச்சந்திரன், மதுரையர் இயக்கத் தலைவர் திருமுருகன், பிள்ளைமார் சங்க மாநில தலைவர் ஆறுமுகம், அம்மா கேட்டரிங் கிருஷ்ணய்யர், தாம்ப்ராஸ் மாநிலத் துணைத் தலைவர் அமுதன், மாவட்ட தலைவர் ரங்கராஜன், மாநில துணைப் பொதுச் செயலாளர் பக்தவத்சலம், சாம்பசிவம், நாத்திக எதிர்ப்பு முன்னணி மாரிமாறன், மாநில துணைத்தலைவர் பிரதீப், மருது ஆனந்த், சோலை பழனிவேல் ராஜன், வைகை நதி மக்கள் இயக்கம் ராஜன், குணசேகர நாயுடு, பாஸ்கர், இரணியன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us