திராவிட மாடல் என்றாலே திருட்டு, இருட்டு, புரட்டு, உருட்டு
திராவிட மாடல் என்றாலே திருட்டு, இருட்டு, புரட்டு, உருட்டு
ADDED : நவ 24, 2025 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை, மத்திய அரசு மறுக்கவில்லை. தேவையான கூடுதல் தகவல்கள் கேட்டு, மாநில அரசுக்கு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், தி.மு.க., அரசு சொல்வது முழுப் பொய். திமுக அரசை நம்பவே மாட்டேன். தி.மு.க.,வினர், கடந்த 1967 தேர்தலில், 'மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்று சொன்னவர்கள் தானே. திராவிட மாடல் அரசு என்றாலே திருட்டு, இருட்டு, புரட்டு, உருட்டு என்று தான் அர்த்தம். அதனால் அவர்கள் சொல்வது எதையும் நம்ப முடியாது. 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு' என்று சொன்னார்களே, அது செத்துப்போய் விட்டதா, இல்லையா? இப்போது, சமஸ்கிருத மொழியைப்பற்றி ஏன் பேசுகிறார்கள். இது மொழி வெறுப்பு; மத வெறுப்பு அரசியல். துணை முதல்வர் உதயநிதி, ஹிந்து விரோத சக்தி. வாக்காளர் சிறப்பு திருத்தப்பணியால் எந்த ஊழியரும் மனஉளைச்சலில் உயிரிழக்கவில்லை. இதுவும் பொய் தான். - ராஜா, மூத்த தலைவர், பா.ஜ.,

