ADDED : அக் 30, 2025 08:07 AM

மாமல்லபுரத்தில் தி.மு.க., நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், வழக்கம்போல, மத்திய அரசு மற்றும் பா.ஜ., மீது வன்மத்தை கக்கி உள்ளார். ஜி.எஸ்.டி., புதிய கல்விக் கொள்கை, 'நீட்' என, மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக, வெறுப்பு அரசியலை அரங்கேற்றி இருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில், ஊட்டச்சத்து முதல் 'டாஸ்மாக்' வரை, பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. 'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தை, கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா கூட, ஏற்று அமல்படுத்த முன்வந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என, ஸ்டாலின் விடாப்பிடியாக இருக்கிறார்.
சொந்த குடும்பம் குதுாகலமாக வாழ்ந்தால் போதும், தமிழக மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என எண்ணும் தி.மு.க.,வினரிடம், மக்கள் நலனை எப்படி எதிர்பார்க்க முடியும். கொள்ளை அடித்து, பல லட்சம் கோடி ரூபாயை சுருட்டுவது தான் திருட்டு திராவிட மாடல் ஆட்சி.
- முருகன்
மத்திய அமைச்சர், பா.ஜ.,

