ADDED : அக் 30, 2025 08:05 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:
தமிழக அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள். அவர்களுக்கு சில கட்டளைகள் வரும்போது, அவற்றை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை வருகிறது.
எப்படிப்பட்ட கட்டளைகள் தேர்தல் கமிஷன் வாயிலாக சொல்லப்பட்டது என தெரியாது. தவறான விஷயங்களை சொல்லி விட்டால், அதிலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் வாயிலாக சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். பீஹாரில் இது போன்று தான் நடந்தது.
தமிழகத்தில், வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்ப்போரின் எண்ணிக்கை லட்சத்திலிருந்து கோடியாக அதிகரித்துள்ளது.
அவர்களுக்கு இங்கு ஓட்டளிக்க வாய்ப்பளிக்கும் போது, வடமாநில சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஓட்டளிக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக நிலவரம் தெரியாதவர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது என்பதே எங்களது நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.

