தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திராவிட கட்சிகளால மாற்றம் வரல!

திராவிட கட்சிகளால மாற்றம் வரல!

திராவிட கட்சிகளால மாற்றம் வரல!


ADDED : ஏப் 14, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 06:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவுதம், 21 கல்லுாரி மாணவர், திருமங்கலம், மதுரை

திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஒண்ணும் மாறல. அதனால, இம்முறை த.வெ.க.,வுக்கு தான் என் ஓட்டு. சினிமா துறையில கிடைக்கிற பல கோடி ரூபாய் சம்பளம், பணம், புகழை விட்டுட்டு மக்கள் பணி செய்யணும்னு வர்றார். நல்லது செய்யணும்னு நினைக்கிறார். வாய்ப்பு கொடுத்துதான் பாப்போமே.

ஜாதி, மத அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒண்ணா பாக்குற தலைவர் விஜய். சினிமாக்காரங்க பின்னாடி போகாதீங்க, நம்பாதீங்கன்னு சொல்றாங்க. ஒருவர் எங்கிருந்து வர்றார் என்பது முக்கியமல்ல. என்ன செய்ய போறார் என்பதே முக்கியம்.

அவரது நேர்மை, உதவும் மனப்பான்மை பிடிச்சிருக்கு. இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து ஊழலற்ற நிர்வாகம் நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கு.

நவீன கட்சியான த.வெ.க.,வுக்கு சோஷியல் மீடியாக்கள் பலம். அதன் மூலம் அவரது தொண்டர்கள் ஓட்டு சேகரிக்கின்றனர். தொகுதியில் யார் நின்னாலும் விஜயின் முகத்துக்காகவே ஓட்டுகள் விழும். என்னதான் மாற்று கட்சிகள் அவரை தவறாக சித்தரிச்சாலும், நெகட்டிவ் கமென்ட்ச பாசிட்டிவாக மாற்றும் திறன் அவரை பின்பற்றுவோருக்கு உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us