‘டிரீம் ஒலிம்பிக்’ திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்
‘டிரீம் ஒலிம்பிக்’ திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்
UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 11:24 PM

சென்னை: ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழாவில், ‘டிரீம் ஒலிம்பிக்’ திட்டத்தை, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
ஆசிய விளையாட்டு மற்றும் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனையருக்கு, முதல்வர் விருந்து மற்றும் உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா, சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று நடந்தது.
மாதம் ரூ.1 லட்சம்
இதில் முதல்வர் விஜய் பங்கேற்று, வீரர் – வீராங்கனையருக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கினார். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களுக்கு, ‘டிரீம் ஒலிம்பிக்’ திட் டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வீரர்களுக்கு உதவித்தொகையாக, மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
அதாவது, இந்த உதவித்தொகை உட்பட, ஒரு வீரருக்கு ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட உள்ளது.
மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில், பதக் கம் வென்ற, 13 வீரர் – வீராங் கனையருக்கு 7.65 கோடி ரூபாய், 40வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பதக்கம் வென்ற ஐந்து வீரர் – வீராங்கனையருக்கு, 60 லட்சம் ரூபாய்...
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் 2 வீராங்கனையருக்கு 14 லட்சம் ரூபாயும், தேசிய சப் – ஜூனியர் மகளிர் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு 18 லட்சம் ரூபாய் என, 8.57 கோடி ரூபாய்க்கான ஊக்கத்தொகைகளையும் முதல்வர் வழங்கினார்.
