UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:19 PM
– நமது நிருபர் ---–: ‘வெற்றி’ பயண திட்டத்தால் பெண் பயணியர் பயனடைந்து வரும் நிலையில், ‘பேட்டா’ குறைக்கப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அரசு பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள் கூறுகின்றனர்.
புறநகர் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணத்தை வழங்கும் ‘வெற்றி’ பயண திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தால் அரசு பஸ்களில் பெண் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.
வழக்கமாக பஸ்களின் வசூல் அடிப்படையில் டிரைவர், நடத்துனர்களுக்கு கி.மீ. கணக்கில் பேட்டா வழங்கப்படும். தற்போது பெண்களுக்கான இலவச பயணத்துக்கான கட்டணத்தை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கி வரும் நிலையில், ஆண் பயணியரிடம் வசூலிக்கப்படும் தொகை மட்டுமே தினசரி கலெக்ஷனாக கணக்கிடப்படுகிறது. இதனால் பேட்டா தொகையும் குறைக்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
