தனியார் பஸ்கள் மோதி விபத்து டிரைவர் பலி; 25 பேர் காயம்
தனியார் பஸ்கள் மோதி விபத்து டிரைவர் பலி; 25 பேர் காயம்
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:16 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சரபோசிராஜபுரத்தில், தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், டிரைவர் பாலாஜி, 27, பலியானார். இதில், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கியும், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கியும் சென்ற தனியார் பஸ்கள், சரபோஜிராஜபுரம் பகுதியில், நேற்று மாலை, நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், டிரைவரான தாராசுரத்தை சேர்ந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தனியார் பஸ் டிரைவரான எடவாக்குடியை சேர்ந்த பிரவீன், 28, படுகாயமடைந்தார்.
இரண்டு பஸ்களில் பயணித்த 25க்கும் மேற்பட்ட பயணியர் படுகாயம் அடைந்தனர். ஏழு பேர் உள்நோயாளிகளாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மற்றும் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
