உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:16 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில், இன்னோவா காரில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, பழமையான திருஞானசம்பந்தர் சிலையை கடத்திய ஜெயவேலன், 48, உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை – திருமங்கலம் நான்கு வழிச்சாலை சிக்னல் அருகே, எட்டையார்புரம் தோப்பு பகுதியில், இன்னோவா காரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
அதில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 15ம் நுாற்றாண்டை சேர்ந்த, திருஞானசம்பந்தர் சிலை கடத்தப்படுவது தெரியவந்தது. இது தொடர்பாக, மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயவேலன், அக்பர், 52, பாண்டியராஜன், 37, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
