உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : ஏப் 29, 2026 06:00 PM
ADDED : ஏப் 29, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பு கிராமம் ஆபிரகாம் தெருவைச் சேர்ந்தவர் மோனி கங்காதரன் 60 . வாடகை கார் டிரைவர்.
ஏப்ரல் 29 அதிகாலை நாகர்கோவிலில் இருந்து காரில் பயணிகளை திருநெல்வேலிக்கு கொண்டு வந்து இறக்கிவிட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
வள்ளியூர் அருகே ஏர்வாடி மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதியில் நான்குவழிச்சாலையில் கார் சென்ற போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதிய கார் , கண்டெய்னரின் கீழ் புகுந்தது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி, அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் மோனி கங்காதரன் பலியானார். ஏர்வாடி போலீசார் விசாரித்தனர்.
