டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
ADDED : ஜூலை 13, 2025 10:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அரும்பாக்கம் சாலையில் தாறுமாறாக ஓடிய பஸ் மோதியதில் ஒருவர் பலியானார்.
சென்னையில் மாநகர கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்றபஸ் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் விபத்தில் சிக்கியது. அரும்பாக்கம் 100 அடி சாலையில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது.
சம்பவ இடத்திலேயே 50 வயது நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாரடைப்பு ஏற்பட்ட பஸ் டிரைவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.