தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘ட்ரோன்’ பதிவு தற்காலிகமாக நிறுத்தம்

‘ட்ரோன்’ பதிவு தற்காலிகமாக நிறுத்தம்

‘ட்ரோன்’ பதிவு தற்காலிகமாக நிறுத்தம்


UPDATED : நவ 26, 2026 06:31 PM

ADDED : நவ 26, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 06:31 PM ADDED : நவ 26, 2026 06:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: உரிய சான்றிதழ் பெறாத ‘ட்ரோன்’களுக்கு, புதிய தனித்துவ அடையாள எண் வழங்குவதை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, டி.ஜி.சி.ஏ., எனும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

நம் நாட்டில், ஆளில்லா விமானங்களான, ‘ட்ரோன்’களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக, ‘டிஜிட்டல் ஸ்கை’ என்ற பிரத்யேக இணையதளம் வாயிலாக, அனைத்து ட்ரோன்களும் பதிவு செய்யப்படுகின்றன.

இவை, வணிகப் பயன்பாடு, விவசாயம், கண்காணிப்பு, ராணுவம் என, நான்கு பிரிவுகளின் கீழ், அவற்றின் பயன்பாட்டை பொறுத்து வகைப்படுத்தப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், விதிவிலக்கு அளிக்கப்பட்ட, சில குறிப்பிட்ட பிரிவுகளை தவிர, முறையான வகை சான்றிதழ் பெறாத ‘ட்ரோன்’களுக்கான புதிய பதிவுகளை, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த உத்தரவு, அமலில் இருக்கும் காலத்தில், சான்றிதழ் இல்லாத ட்ரோன்களுக்கான புதிய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்படாது.

வான்வெளியில் பாதுகாப்பு தர நிலைகள் மற்றும் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு உட்பட்ட, ‘ட்ரோன்கள்’ மட்டுமே இயக்கப்படுவதை உறுதி செய்யவும், பதிவு நடைமுறைகளை முறைப்படுத்தவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us