உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 26, 2026 06:31 PM
ADDED : நவ 26, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
அரியலுார்: அரியலுார் மாவட்டம், இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் மகன் தமிழ்வாணன், 25. இவர், நண்பர்களுடன் சேர்ந்து உடையார்பாளையம் வேலப்ப செட்டி ஏரியில் குளிக்க சென்றார். அப்போது, ஏரியின் ஆழத்துக்கு சென்ற தமிழ்வாணன், நீரில் மூழ்கினார்.
தகவலறிந்த, ஜெயங்கொண்டம் தீயணைப்பு படை வீரர்கள், தமிழ்வாணனை சடலமாக மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடையார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
