அமித் ஷா கூட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட 'ட்ரோன்'
அமித் ஷா கூட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட 'ட்ரோன்'
ADDED : பிப் 15, 2026 03:09 AM
புதுச்சேரி: காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற கூட்டத்தில், தடையை மீறி பறந்த 'ட்ரோன்' எனப்படும் வானில் இருந்து வீடியோ எடுக்க பயன்படும் கருவி சுட்டு வீழ்த்தப்பட்டது.
காரைக்காலில் நேற்று பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து, ௧ கிலோ மீட்டர் வரையில் ட்ரோன் பறக்க மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினம் தடை விதித்தது.
இந்நிலையில் நேற்று மதியம், பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசிக் கொண்டிருந்தபோது, தடையை மீறி ட்ரோன் ஒன்று பறந்தது. மத்திய பாதுகாப்பு படையினர், ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்ப உதவியுடன் ட்ரோனை சுட்டு வீழ்த்தினர்.
காரைக்கால் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். ட்ரோன் பறக்கவிட்டது, திருநள்ளாறைச் சேர்ந்த லோகேஷ், 25, என்பது தெரிந்தது.
மத்திய அமைச்சர் அமித் ஷா பொதுக்கூட்டத்தை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து, அதை தன் 'யூ டியூப்'பில் பதிவேற்ற ட்ரோன் பறக்கவிட்டதாக கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
