தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கிய போதை ஆசாமி கைது

டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கிய போதை ஆசாமி கைது

டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கிய போதை ஆசாமி கைது


ADDED : நவ 04, 2026 01:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 01:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செய்யாறு: டாஸ்மாக் கடையில் கால பாட்டில் ஸ்கேன் ஆகாத தகராறில் சூபர்வைசரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில், ஆற்றங்கரை ஓரம், இரண்டு டாஸ்மாக் கடை உள்ளது. இங்குள்ள ஒரு கடையில் நேற்று முன் தினம் இரவு மது வாங்கி அருந்திய மது பிரியர் ஒருவர், காலி மதுபாட்டிலை திரும்பி கொடுத்துவிட்டு, 10 ரூபாயை வாங்க சென்றார். அப்போது காலி பாட்டிலை ஸ்கேன் செய்தபோது சரியாக ஸ்கேன் ஆகவில்லை. இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமி உங்க கடையில் வாங்கின பாட்டில் ஸ்கேன் ஆகலனா எப்படி என கேட்டு தகராறு செய்தார்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமி பணியில் இருந்த செய்யாறு கீழ் புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்த, கடை சூபர்வைசர் பாலகிருஷ்ணன், 52, என்பவரை தாக்கினார். இதனால், அங்கிருந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூடினர். மது வாங்க வந்தவர்கள் கடையை திறக்கும்படி கூச்சலிட்டனர். செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, சூபர்வைசரை தாக்கிய செய்யாறு வெங்கட்ராயன்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன், 28, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பத்துார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுவாங்க சென்ற ஒருவர் டாஸ்மாக் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியதில், அங்கிருந்த கிரில் கேட் மீது பாட்டில் பட்டு உடைந்து, ஊழியர் ஒருவர் லேசான காயமடைந்தார். இந்த சம்பவத்தை மது பாட்டில் வாங்க வந்திருந்த ‘குடி’மகன்கள் பார்த்து, பீர் பாட்டிலால் தாக்கிய ஆசாமியை சரமாரி தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்தனர். இது குறித்த வீடியோ தற்போது பரவி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us