போதை பொருள் கடத்தல் பிரமுகர் வெளிநாட்டில் பதுங்கி சதி
போதை பொருள் கடத்தல் பிரமுகர் வெளிநாட்டில் பதுங்கி சதி
ADDED : மே 28, 2026 04:56 AM
சென்னை: வெளிநாட்டில் பதுங்கி உள்ள முக்கிய பிரமுகர், இலங்கைக்கு 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்த முயன்றது, விசார ணையில் தெரியவந்துள்ளது.
டி.ஆர்.ஐ., எனும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், 2024 மார்ச்சில் ராமநாதபுரத்தில் இருந்து படகு வாயிலாக, இலங்கைக்கு கடத்தப்பட்ட 108 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா எண்ணெயை பறிமுதல் செய்தனர்.
அதே மாதம், மதுரை ரயில் நிலையத்தில், 150 கோடி ரூபாய் மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய, சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக, பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில், ஐந்து இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் சென்னையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பதும், அவர் வெளிநாட்டில் பதுங்கி கடத்தலுக்கு சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.
