உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 09, 2026 06:34 AM

அ நிறம் | அளவு
சென்னை : 'இரண்டு மாதங்களில், 22.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன' என, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும், சர்வதேச கும்பல்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டில், இரண்டு மாதங்களில், 165.24 கிலோ கஞ்சா எண்ணெய், 1.045 கிலோ ஆம்பெட்டமைன் என, 22.50 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
போதைப்பொருள் கடத்தலின், 'நெட்ஒர்க்' குறித்து விசாரித்து, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
