ADDED : ஆக 25, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்து கடவுள்களை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஈடுபடுகிறது.
ஹிந்து சமய வழிபாட்டு முறைகள் குறித்து தவறாக பேசிய பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு, நீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவாக தி.மு.க., அரசு அறிக்கை அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா வில் விலங்குகளை பலியிடுவதற்கு, அறநிலையத்துறை முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. பின், நீதிமன்றத்தில் சிக்கந்தர் மலை என்பதற்கான சான்றுகள் உள்ளதாக தி.மு.க., அரசு கூறுகிறது.
இது, அரசின் இரட்டை நிலைப்பாடு. இதெல்லாம் ஹிந்துக்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கெல்லாம் உரிய பதிலை, சட்டசபை தேர்தல் வாயிலாக தி.மு.க.,வுக்கு மக்கள் அளிப்பர்.
-அர்ஜுன் சம்பத்
தலைவர்
ஹிந்து மக்கள் கட்சி

