தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மருத்துவமனையில் துரைமுருகன் 'அட்மிட்'

மருத்துவமனையில் துரைமுருகன் 'அட்மிட்'

மருத்துவமனையில் துரைமுருகன் 'அட்மிட்'


ADDED : பிப் 18, 2025 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 07:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை; உடல்நலக் குறைவு காரணமாக, அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சராகவும், தி.மு.க., பொதுச்செயலராகவும் இருப்பவர் துரைமுருகன், 86. வயது மூப்பால் வரும் பிரச்னைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களாக சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், காய்ச்சல், சளி பாதிப்பு நேற்று அதிகரித்ததால், உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் மருத்துவமனை சென்று, துரைமுருகனிடம் நலம் விசாரித்தனர். அவரது உடல்நிலை குறித்து, டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us