ADDED : ஆக 05, 2025 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று மாலை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
துாத்துக்குடியில் இருந்து திருப்பரங்குன்றம் வந்த துர்கா, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றார். அங்கு கோயில் நிர்வாகிகள், அறங்காவலர் குழுத் தலைவர் சத்திய பிரியா, துணைக் கமிஷனர் சூரியநாராயணன், கோவில் ஸ்தானிக பட்டர்கள் அவரை வரவேற்று, திருக்கோயில் கருவறைக்கு சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். 25 நிமிடங்கள் தரிசனம் செய்த அவரை, கோயில் அறங்காவலர் குழுவினர் வழி அனுப்பி வைத்தனர்.