ADDED : அக் 22, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழக அரசு தீபாவளியை முன்னிட்டு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் அறிவிப்பை, கடந்த 10ம் தேதி வெளியிட்டது.
ஒரு வாரத்திற்கு மேலாகியும் போனஸ் வழங்கப்படாததால், விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, மின் வாரிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்க, நேற்று காலை ஆணை பிறப்பித்தது. நாளை, ஊழியர்களின் வங்கி கணக்கில் போனஸ் தொகை செலுத்தப்படும். ஒருவருக்கு அதிகபட்சம் 16,800 ரூபாய் கிடைக்கும்.
இதேபோல, டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க, 'டாஸ்மாக்' நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது. இன்று, ஊழியர்களின் வங்கி கணக்கில் போனஸ் தொகை செலுத்தப்பட உள்ளது.