உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 10, 2024 02:47 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கடப்பசந்தம்பட்டி பஞ்., பெத்தபாம்பட்டியில் நேற்று மதியம் 1:32 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதில், வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. உடனடியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு கூறுகையில், ''மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது உண்மை. ரிக்டர் அளவில், 3.3 ஆக பதிவாகி உள்ளது. சேதம் ஏதும் ஏற்படவில்லை.
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, அரசம்பட்டி, ஊத்தங்கரை மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளிலும், நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வந்தாலும், எந்த பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.
