sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொருட்களை சுமக்கும் எளிதாக... 'சுமை' இல்லா வாகனம் நமக்காக

/

பொருட்களை சுமக்கும் எளிதாக... 'சுமை' இல்லா வாகனம் நமக்காக

பொருட்களை சுமக்கும் எளிதாக... 'சுமை' இல்லா வாகனம் நமக்காக

பொருட்களை சுமக்கும் எளிதாக... 'சுமை' இல்லா வாகனம் நமக்காக


ADDED : ஜூன் 29, 2025 02:14 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறிய மின் வணிக வாகனங்களைக் கொண்டு வரும் நோக்கில், 2020ல் 12 லட்சம் ரூபாய் முதலீட்டில், 'ஸ்பீட்லுாப்ஆட்டோ' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் 'CROC EV' மற்றும் 'STIGER EV' என்ற இரண்டு மாடல்களிலான மூன்று சக்கர வாகனங்களை உருவாக்கின. முன்புறம் இரண்டு சக்கரங்கள்; பின்புறம் ஒரு சக்கரம் கொண்டவை. இரு வாகனங்களும் முறையே 100 கிலோ/350 லிட்டர்; 250 கிலோ/500 லிட்டர் சுமை திறன் கொண்டவை. ஒரே சார்ஜில் பயணிக்கும் துாரம் 40- - 120 கிமீ; வேகம் மணிக்கு 25 - 60 கி.மீ.,

தினசரி நகர்ப்புற வினியோக நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட லித்தியம் -அயன் பேட்டரிகளால் இயக்கப்படுகின்றன. முன்புறம் பொருட்கள் ஏற்றும் வசதியை கொண்டுள்ளன. கியர்கள், கிளட்ச் மற்றும் பேலன்சிங் தேவையில்லை என்பதால் எளிமையாக உள்ளது.எரிபொருள் செலவு ஒரு கி.மீ.,க்கு 80 பைசா வரை. பராமரிப்பு செலவுகள் ஆண்டுக்கு 1000 ரூபாய் மட்டுமே. பேட்டரி பேக் மற்றும் மோட்டாருக்கு 3 ஆண்டு உத்தரவாதம் தருகிறது.

வாகனங்களின் நோக்கம்


இரு சக்கர வாகனங்களை வணிக வாகனங்களாகப் பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களையும், பெரிய மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பெரிய இயக்க இழப்புகளையும் உணர்ந்து இந்த வாகனங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த வாகனங்கள் வழக்கமான இரு சக்கர வாகனத்தை விட 20 - -30 சதவீதம் பெரியவை; மூன்று சக்கர வாகனத்தில் பாதி அளவுக்கு இருக்கின்றன.

தாங்கள் தயாரித்துள்ள வாகனங்கள், கார்பன் தடயத்தைக் குறைக்கும்; வாகனங்களின் இயக்கச் செலவுகள் பெரிய வணிக வாகனங்களை விட 40- - 60 சதவீதம் குறைவாக இருக்கும் என்று 'ஸ்டார்ட் அப்' கூறுகிறது. பால், தண்ணீர், உணவுகள், மளிகைப் பொருட்கள் டெலிவரி; ஆடைகள் போன்ற பொருட்களின் போக்குவரத்து; பார்சல் டெலிவரி; போர்ட்டர் சேவைகள் போன்றவற்றுக்கு வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

வாட்ஸ்ஆப் எண் : 86250 40203

இ - மெயில் scouts @speedloopauto.com

இணையதளம் www.speedloopauto.com

உங்கள் சந்தேகங்களுக்கு இ-மெயில்: Sethuraman.sathappan@gmail.com

அலைபேசி: 98204 51259 இணையதளம் www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -






      Dinamalar
      Follow us