ADDED : டிச 10, 2024 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பொருளாதார குற்றப்பிரிவு இணையதளம், நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழக காவல் துறையில், நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்க, பொருளாதார குற்றப்பிரிவு துவக்கப்பட்டது. இதனுடன் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு இணைக்கப்பட்டு, தற்போது ஒரே பிரிவாக செயல்படுகிறது. இப்பிரிவுக்கான இணையதளம் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
இதில், பொருளாதார குற்றப்பிரிவு செயல்படும் விதம், பணிபுரியும் அதிகாரிகள் பெயர், அவர்களின் தொடர்பு எண்கள், மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பான எச்சரிக்கை தகவல்கள் போன்றவை இடம் பெற்று உள்ளன. இணையதள முகவரி, tneow.gov.in.
இதன் வழியே புகார் அளிக்கவும், அதன் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.