ADDED : ஜன 03, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுாரில், தி.மு.க., அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும் எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை என தகவல் பரவியதும், போலீசார் உஷாராகினர்.
சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த வீட்டிற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வருவரா என, உளவு போலீசார் கண்காணித்து, நிமிடத்திற்கு நிமிடம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கு முன், மற்றொரு அமைச்சரான செந்தில் பாலாஜி தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், அவரது அறையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல், துரைமுருகன் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படலாம் என தகவல் பரவியதால், கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தீவிர சோதனைக்கு பின்னரே, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

