எல்.இ.டி., விளக்குகள் கொள்முதல்; மோசடி குறித்து ஈ.டி., விசாரணை
எல்.இ.டி., விளக்குகள் கொள்முதல்; மோசடி குறித்து ஈ.டி., விசாரணை
UPDATED : டிச 23, 2025 10:09 AM
ADDED : டிச 23, 2025 07:30 AM

சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், எல்.இ.டி., தெரு விளக்குள் அமைத்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கு விபரங்களை சேகரித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, உள்ளாட்சி துறை அமைச்சராக வேலுமணி இருந்தார். அவரது துறையில், மாநிலம் முழுதும், 8 லட்சம் தெருக்களுக்கு எல்.இ.டி., விளக்குகள் பொருத்த, 300 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
எல்.இ.டி., விளக்குகள் வாங்கியதில் அரசுக்கு, 74 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. அதேபோல, 2019 - 2020ம் ஆண்டில், அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி., விளக்குகள் கொள்முதல் செய்ததில், 97.33 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு விபரங்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் சேகரித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

