ADDED : மே 24, 2025 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:
டாஸ்மாக் ஊழல் குறித்து நடந்து வரும் அமலாக்கத் துறை விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லரை விற்பனையில் பாட்டிலுக்கு, 10 முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக வாங்குவது முதல், 'பார்' ஏலம் விடுவது வரை, பல வகைகளிலும் ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடக்கிறது.
டாஸ்மாக் ஊழலில் முதல்வர் குடும்பம், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர்.
எனவே, அமலாக்கத் துறை திறமை வாய்ந்த வழக்கறிஞர்களை அமர்த்தி, வலுவான வாதங்களை முன்வைத்து, உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையை நீக்கி விசாரணையை மீண்டும் துவக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

