இந்தியாவின் கல்வி மையமாக ஜொலிக்கும் தமிழகம்: முதல்வர் பெருமிதம்
இந்தியாவின் கல்வி மையமாக ஜொலிக்கும் தமிழகம்: முதல்வர் பெருமிதம்
UPDATED : ஆக 13, 2024 12:42 PM
ADDED : ஆக 13, 2024 12:40 PM

சென்னை: இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிப்பது பெருமையான தருணம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சகம் 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் 2ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும், டில்லி ஐஐடி 4ம் இடத்தையும் பிடித்துள்ளன. பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டில்லி ஐஐடி 2வது இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
பெருமைக்குரியது
இந்நிலையில், சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: உயர்கல்வி தரவரிசை பட்டியலில் நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது. இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிப்பது பெருமையான தருணம். உயர்கல்வி நிறுவனங்களில் உயர்தரத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்படுவது பெருமைக்குரியது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ள திராவிட மாடலுக்கு பெருமையான தருணம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.