உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 01, 2026 01:09 AM

அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல்லில், தே சிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில், முட்டை கொள்முதல் விலை, 30 காசு குறைத்து, 5.70 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம், ஒரு வாரத்தில் முட்டை விலை, 1.10 ரூபாய் குறைந்துள்ளது.
'ஆடி மாதம் என்பதால், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மக்கள் விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் முட்டை விற்பனை, 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.
வடமாநிலங்களிலும் முட்டை விலை குறைந்துள்ளதால், தமிழகத்திலும் முட்டை விலை குறைந்துள்ளது' என, பண்ணையா ளர்கள் தெரிவித்தனர்.
இதேபோல், ஒரு கிலோ, முட்டைக்கோழி, 102 ரூபாய், ஒரு கிலோ, கறிக்கோழி, 127 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
