ADDED : நவ 02, 2026 07:34 PM
நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், இன்று (நவ.,2) நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
இதையடுத்து, 620 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 630 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நான்கு நாட்களில், 60 காசு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை(காசுகளில்) நிலவரம்:
சென்னை, 690, ஐதராபாத், 625, விஜயவாடா, 675, பர்வாலா, 627, மும்பை, 680, மைசூரு, 690, பெங்களூரு, 670, கொல்கட்டா, 710, டில்லி, 660 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ முட்டைக்கோழி, 100 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி, 122 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
